இவர் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சித்தர்கள் மக்கள் நிறைந்த பகுதிகளில் வாழாமல் தனிமை நாடி வனங்களில் வாழ்ந்தவர்கள். சித்தர்கள் இம்மண்ணில் மக்களின் பயன் கருதி பல பொருட்களைப் பற்றி ஆய்ந்து அறிவித்தவர்கள். ஆழ்ந்த புலமையால் கருப்பொருளாக அகம், புறம் தவிர மருந்து குணமுள்ள தாவர, தனிமங்களைக் குறித்தும் பாடிச் சென்றுள்ளனர். தன் அகம் ஒரு நிலையில்லாது பேயாய் அலைவதாகவும், எனவே மனதை அலை பாய விடாமல் நின்று நிலை பெற்ற வாழ்வு பெற மனதைக் கட்டுக்குள் வைக்குமாறு தன் பாடல்களில் அறிவுரை கூறியவர்.
|