தமிழ் வளர்த்த அறிஞர்கள்


அடியார்க்கு நல்லார்

சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களை சோழர்கள் 9ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலத்தின் பெயர் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் கொங்குவேளிர் 'பெருங்கதை'யையும்; பவணந்தி 'நன்னூலையும்; அடியார்க்கு நல்லார் 'சிலப்பதிகாரத்'திற்கு உரையையும் எழுதியுள்ளனர்.

இவர் எழுதிய பாடலிலேயே தன் ஊர்ப்பெயரையும் வழங்கியுள்ளார்.

"ஆருந்தெரிவுரை விரித்தானடியார்க்கு நல்லன், காருந்தருவுமனையா னிரம்பையர் காவலனே",

எனும் இப்பாட்டில் நிரம்பையர் நாடே இவர் பிறந்த ஊராகத்தெரிகிறது.

 



© 2005 Kaniyatamil Software