அரசராய் வீற்றிருந்து தமிழ்ப்பற்றால் பல நூல்களைப் படைத்தவர். சிறந்த சிவநெறியாளர். சுவாமிதேவரிடம் சிவ தீட்சை பெற்றவர். இவர் அவைக்களம் புலவர்கள் நிரம்ச்பியது. இவரின் நைடதச்செய்யுள் அரங்கேற்றுகையில் பாடலின் இடையே வந்த புதியதொரு சொல்லன ஒன்றிற்கு விளக்கம் தெரியாமல் வீடு சேர்ந்தார். வாட்டமுற்ற இவரைக் கண்டு இவர் மனைவி நடந்தவற்றை வினவ, இவர் காரணம் கூறியவுடனே, இவர் மனைவி விளக்கம் கூறினார். அந்த அளவுக்கு தமிழ்ப் புலமைப் பெற்ற பாண்டிய மன்னர் மரபில் வந்தவர் இவர்.
|