நாயக்க மன்னரான ஒருவர், காளமேகப் புலவரின் சமகாலத்தவர். திருமலைராயரின் அவைக்களத்தில் அறுபத்தி நான்கு புலவர்கள் அடங்கியகுழுவிற்கு இவர் தலைவராக விளளங்கியவர். காளமேகம் திருமலைராயனைச் சந்திக்க வரும் போது அவைக்களத்தில் இவர் காளமேகத்தை அவமதிக்க காளமேகம் வெகுண்டு விசை பாடினார். அதிமதுரக்கவிராயரும் உம்மால் என்ன பாட முடியும் எனக் கேட்க ,யம காண்டம் பாடுவேன் என்றார்.
யமகாண்டம்: இது அபாயம் நிறைந்த ஒரு சோதனை. ஆழமான குழியில் நெருப்பு மூட்டி, சங்கிலியால் பிணைத்த புலவனை உறி போல உயரே தொங்க விடுவர். மேலிருக்கும் புலவன் தொங்கியபடி கீழே இருப்பவர்கள் கேட்கும் சங்கதிகளைப் பிழையில்லாமல் பாட வேண்டும். சரியாகப் பாடாவிட்டால் உறி நெருப்புக்குண்டலத்தில் கீழிறங்கும். இது போன்றதொரு அமைப்பில் உறியில் தொங்கியவாறு காளமேகம் பாடினார். அதிமதுரக்கவிராயர் தலைமைப்புலவர்கள் கூட்டமாக நின்ற படி சங்கதிகளைக் கூறினர், காளமேகம் வென்றார்,பரிசிலும் பெற்றார்.
|