சிட்டுக்கவி இலக்கியம் பல படைத்தவர் திருவாரூருலா, சேவூர்க்கலம்பகம் முதலியவை பாடியவர். செங்கற்பட்டில் உள்ள பொன் விளைந்த களத்தூரில் பிறந்தவர். வடுகனாத முதலியார் இவர் தந்தை. பிறவியிலே பார்வையற்றிருப்பினும் செங்கற்பட்டிலிருந்து சோழநாடு, சேரநாடு, ஈழநாடுகளுக்குச் சென்று பாடியவர். யாழ் மீட்டுவதிலும் வல்லவர். கவியுடன் வீணை மீட்டும் இவரின் தமிழ்த்திறம் புகழைக் குவித்தது. பதினேழாம் நூற்றாண்டு தொடங்கி இவர் புனைந்த பாடல் வருவது சிறப்பாகும்
"இம்பர் வானெல்லை இராமனையே பாடி ,யென்கொணர்ந்தாய் பாணா நீ! என்றாள் பாணி, வம்ப தாங்களபமென்றேன் பூசும் என்றாள்"
எனும் இப்பாடல்.இவர் ஈழ நாட்டிற்குச் சென்று பரராச சிங்கமெனும் ஈழநாட்டு அரசனிடம் பாடி பரிசு பெற்று நாடு திரும்பிய போது இவர் மனைவி என்ன பரிசு கொண்டு வந்தீர்கள் எனக்கேட்டபோது பாடியவை.
|