பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவரான அம்பலவாணக் கவிராயர் சிறந்த சைவ நீதி நூலான “அறப்பள்ளீச்சுர சதகம்” என்ற நூறு பாடல்களைக் கொண்ட நூல் பாடியுள்ளார். சதக நூல்களில் சிறந்ததாகக் கருதப்படும் இந்நூலின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும், “அனுதினமும் மனதில் நினை தருசதுர, கிரிவளர் அறப்ள்ளீச்சுர தேவனே” என்ற புகழ்ச்சியுடன் முடிகின்றது. கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றொரு பெயரும் இருப்பதை அறியலாம்.இந்நூலாசிரியர் அருணாச்சலக்கவிராயரின் குமாரராவார்.
|