தமிழ் வளர்த்த அறிஞர்கள்


அய்யனரித்தனார்

கி.பி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட, தமிழ் இலக்கண நூலாகிய புறப் பொருள் வெண் பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார் சேரநாட்டைச் சேர்ந்தவர்.

ஆதிகாலத்தில் அகத்தியர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்முடன் இருத்திக்கொண்டு தமிழாய்ந்தகாலத்தில், அந்தப் பன்னிரு சீடர்களும் 'பன்னிரு படலம்' என்னும் நூல் தொகுப்பை யாததனர்.
அதன் வழிநூல்களாகப் பல நூல்கள் எழுந்தன. அவற்றுள் பல,
மறைந்துபோயின. சிலநூல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒருநூல்தான் 'புறப்பொருள் வெண்பாமாலை' அதன் பெயர் உணர்த்துவது போல, இது வெண்பாக்களால் ஆகிய நூல். புறவொழுக்கத்தைப் பற்றி விளக்கிக்கூறும் நூல் இது. ஒவ்வொரு திணையிலும் உள்ள துறைகளுக்குரிய சூத்திரங்களையும் குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு வெண்பாவையும்
அமைத்திருக்கிறார் நூலாசிரியர்.

வளமான இல்லத்திலே வாழும் ஒரு மனைவி தன் கணவனின் செல்வச் செழிப்பை வாழ்த்துவது 'கற்பு முல்லை' என்ற துறையாகப் புறத்திணையின் பொதுவியல் படலத்தில் சொல்லப்படுகிறது.

இந்நூலுக்கு மாகலூர்க்கிழார் உரை நூல் செய்துள்ளார்.

 



© 2005 Kaniyatamil Software