தமிழ் வளர்த்த அறிஞர்கள்


அரிசில் கிழார்

அரிசில் கிழார் என்னும்
புலவர் புறநானூற்றுப் பாடல் பாடியுள்ளார். அரிசில் என்னும் ஊர் குடந்தையின் அருகில்
இருக்கிறது.

யாரோ ஓர் அரசன். அவன் பொருட்டு ஒரு வீரன் போருக்குச்
சென்று, அரசனுக்கு ஏற்பட்ட இடரைத் தான் தாங்கி, காயம் பட்டு
வீழ்கின்றான். அவனை எடுத்து வந்து வீட்டில் சேர்க்கின்றனர்.
அவனுடைய மனைவி அவனுடைய புண்கள் ஆறுமாறு வைத்தியமும்
செய்து, அத்துடன் அந்த விழுப்புண்களால் மேற்கொண்டு
பிரச்னைகள் ஏற்படாமலும், விரைவில் ஆறுமாறும் காக்கின்றாள்.

அதனை ஒரு செய்தியாக அவள் தன் தோழியிடம் சொல்லி
அவளையும் உதவிக்கு அழைக்கிறாள்.

அரிசில் கிழார் அதனை ஒட்டுக் கேட்டாரோ என்னவோ
தெரியவில்லை. அதனை அப்படியே பாடலில் அமைத்துப்
பாடியிருக்கிறார்.

 



© 2005 Kaniyatamil Software