|
ஜோர்ஜ் எல்.ஹார்ட் |
| ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றுகிறார். பெர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இவரே மூல காரணர் ஆவார். தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்திய பெரியார்களில் இவர் முக்கியமானவர். இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004ல் இருந்து தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. |
அடிப்படையில் இவர் ஒரு ஆங்கிலேயர் ஆவார். ஹார்ட சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பெற்றுள்ளார். அத்துடன் விஸ்கொன்சின் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றினார். இவருக்கு லத்தீன், கிரேக்கம், ருஷ்யன், ஜெர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு.
ஹார்ட் பல பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்திற்குப் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இவர் மொழிபெயர்த்த The Poems of The Tamil Anthologies (1979) எனும் நூல் The American Book Award க்கு பரிந்துரை செய்யப்பட்டது. The Four Hundred Songs of War and Wisdom (1999) எனும் புறநானூறு மொழிபெயர்ப்பு தென்னாசிய மையம் ஏ.கே.ராமானுஜன் பரிசைப் பெற்றது. கனேடிய இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருதினை 2005 ஆம் ஆண்டிற்கு பெற்றுள்ளார். |
|