|
சீகன் பால்கு (1682-1719) |
1682ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த சீகன்பால்கு, டென்மார்க் நாட்டின் திருச்சபை சார்பில் கிறிஸ்தவ மதப் பிரசாரப் பணிக்காக கப்பல் மூலம் 1706-ம் ஆண்டு தரங்கம்பாடி வந்திறங்கினார். வந்த 11வது நாளே தமிழ் கற்கத் தொடங்கினார்.
பின்னர் தமிழ்ப் பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகளைத் தொடங்கினார். 17,000 சொற்களைக் கொண்ட தமிழ் அகராதியை உருவாக்கிய அவர், புதிய ஏற்பாட்டை முதன் முதலாக தமிழில் மொழிபெயர்த்தார்.
|
1710-ம் ஆண்டில் ஜெர்மனியிலிருந்து அச்சு இயந்திரத்தைக் கொண்டு வந்தார். தமிழ் மர அச்சுகளை தயாரித்தார்.
பொற்கொல்லர்களைக் கொண்டு சிறிய தமிழ் அச்சுகளை உருவாக்கினார்.
1715-ம் ஆண்டில் தமிழ் மொழியில் முதன் முதலாக புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்குவின் முயற்சியால் இந்திய மொழிகளில் முதல் மொழியாக தமிழ் அச்சேறியது. 1718-ம் ஆண்டில் தரங்கம்பாடியில் புதிய ஜெருசலேம் தேவாலயத்தை உருவாக்கினார். 1719-ம் ஆண்டு மறைந்தார்.
|
|