காலந்தோறும் தமிழ் நூல்கள்


சங்க காலத்தில் தோன்றிய நூல்கள்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர் 
திருமுருகாற்றுப்படை - நக்கீரர் 
நெடுநல்வாடை
இறையனார் அகப்பொருள் - இறையனார்
பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
பெரும்பாணாற்றுப்படை
மலைபடு கடாம் - பெருங்குன்றுப் பெருங்கசிக்கனார்
அகநானூறு :

அகத்திணைக்குரிய கருப்பொருள்களாக தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள்,விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலிய பதினான்கும் உயர்திணைக்குரியதாக வைத்து இயற்றப்பட்டதே அகநானூறு. சங்க இலக்கியம் எட்டுத் தொகைகளில் ஏழாவதாக வைத்துப் போற்றப்படுவது அகநானூறு. இதில் உள்ள செய்யுள்கள் அகப்பொருட்களை அடிப்படையாய் வைத்து பெருந்தேவனார் முதலிய பெரும் புலவோர் குழுமம் இதனை படைத்தது.
அகநானூறு நிரை, மணி, கோவை என மூன்று பகுதியாகத் தொகுக்கப்பட்டது. நிரையை விளக்க இதன் அகப்பொருள் வலிமை வாய்ந்த ஒரு யானைக்கு நிகராம். மணி மதிப்பில் அளவிட பவளம் எனவும் முத்துக்களால் கோர்க்கப்பட்ட மாலையை ஒத்த நித்திலக் கோவை எனவும் வழங்கப்படும். இவ்வாறு இதனைத் தொகுத்தவர் உருத்திரசன்மன், இவர் தொகுக்க உதவிய அரசன் உக்கிரப் பெருவழுதி அகநானூற்றிக்கு நெடுந்தொகை என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு.

புறநானூறு: -
பாடியவர்கள் 74 புலவர் பெருமக்கள்
பரிபாடல்:

சங்கப் புலவர்களால் ஆக்கப்பட்டது. எட்டுத்தொகை வரிசையில் ஐந்தாம் நூலாக இதனைக் கூறுவர். திருமால், குமரன், கடல், வைகை, மதுரை முதலியவற்றை முன்னிலைப்படுத்தி பாடப்பட்ட எழுபது பாடல்களின் தொகுப்பாகும்.

பதிற்றுப் பத்து :
எட்டுத்தொகை நூலில் நான்காவதாக எண்ணத்தக்கது. பத்து பேரடங்கிய சங்கப் புலவர்களால் இது இயற்றப்பட்டது. பத்து புலவோரும் பத்து, பத்து, பாக்களை இதில் இயற்றியுள்ளனர். இதில் முதலாம் பாடலும் பத்தாம் பாடலும் கிடைக்கவில்லை. இரண்டு முதல் ஒன்பது வரையே கிடைக்கப் பெற்றது. சேர அரசர்களின் வாழ்வையும், வளத்தையும் கூறும் நூல் இது.
ஐங்குறுநூறு :
அகத்திணைப் பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ள நூல். ஐந்து பகுதிகளான இந்நூலை ஓரம் போகியார், அம்மூவனார், கபிலர், ஒதலாந்தையார், பேயனார் முதலான புலவர்கள் ஒவ்வொருவரும் நூறு, நூறு அகவல்களாகப் பாடியுள்ளனர். இதன் தொடக்கமான இறை வாழ்த்துப் பாடலை பெருந்தேவனார் படைத்துள்ளார். இப்பாடல் திரட்டை புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுத்தார்.
கலித்தொகை :
எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகக் கூறப்படுவது. கலித்தொகை நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இதில் புலவர் குழுவே பாடியுள்ளது. கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.
குறுந்தொகை :
எட்டுத்தொகை வரிசையில் இரண்டாம் நூலிது. சங்கப் புலவர்கள் மூவர் இதனைப் படைத்துள்ளனர். இந் நூலுக்கு பேராசிரியரும், நச்சினார்க்கினியனாரும் உரை எழுதியுள்ளனர்.
நற்றிணை :
ஐந்து திணைகளிலும் நானூறு பாடல்களைக் கொண்ட நூல். பெருந் தேவனார் தொடங்கி ஆலங்குடிவங்கனார் இறுதியாகக் கொண்டு புலவோர் குழுவால் பாடப்பட்ட நூல் இதை பன்னாடு தந்த பாண்டியன் பெருவழுதி தொகுத்தார்.
சிறுபாணாற்றுப்படை - நத்தாதனார்

பன்னிருபாட்டியல்

- பொய்கையார்புலவர்குழு
பொருநராற்றுப்படை - முத்தமக் கண்ணியார்
மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார்

முல்லைப்பாட்டு -

- நம் பூதனார்
மேற்காணும் நூல்கள் சங்க காலத்து நூல்களாய் இலக்கிய வரலாறு கூறுகிறது.


© 2005 Kaniyatamil Software