கல்வி


எமது நிறுவனம் மூலம் மூன்று விதமான கல்வி முறைகளை செயல்படுத்த இருக்கிறோம். அவையாவன :

1. நேரடி தமிழ் வழிக் கணியப்பயிற்சி
2. கணியத்தமிழ்
3. கணியம் மூலம் தமிழ் மற்றும் தமிழ் வழிக் கல்வி

1. நேரடி தமிழ் வழிக் கணியப்பயிற்சி

தற்போது கணியக்கல்வி ஆங்கில வழியில்தான் கற்பிக்கப்படுகிறது. இதை மாற்றி தமிழ் வழியிலேயே கணியத்தை இயக்குவதற்கும் சுயமாக கணிப்பொறியை தமிழிலேயே கையால்வதற்கும் நேர்த்திமிக்க பயிற்சி தருவதே இதன் நோக்கம்.

2. கணியத்தமிழ்

இன்று தமிழில் கணித்தியத்திற்கு தேவையான மெல்லியங்கள் குறைவாகவே உள்ளன. தமிழில் மெல்லியம் என்றாலே வரியுருக்களை உருவாக்குவதும், அதனை சந்தைபடுத்துவது என்பது மட்டில் உள்ள தமிழ் கணியவியல் துறையை அடியோடு மாற்றிட கணியத்தமிழ் பயிற்சி மூலம் புதிய புதிய மெல்லியங்கள் தயாரிப்பதற்கு தேவையான ஆக்கபூர்வ பயிற்சிகளை தமிழருக்கு வழங்குவதே இதன் இலக்காகும்.

3. கணியம் மூலம் தமிழ் மற்றும் தமிழ் வழிக் கல்வி

அறிவியல் மற்றும் இதர தொழில்நுட்ப கல்வி அனைத்தும் பிறமொழி சார்ந்தே உள்ளது. அந்நிலையை மாற்றி முற்றிலும் தமிழிலேயே எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற மூதுரைக்கேற்ப அறிவியல், கணிதம், இதர தொழில்நுட்ப கல்வி அனைத்தையும் தமிழ் வழியிலேயே வழங்குவது.


© 2006 Kaniyatamil Software