கணியத்தில் இந்திய மொழிகளின் பயன்பாட்டை மேம்படுத்த ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் கூட்டு முயற்சி


Kapilan with Gary

சென்னை கணியத்தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனமும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டேவல்ட்சாஃப்ட்(Tavultesoft) நிறுவனமும் இணைந்து இந்திய மொழிகள் யாவற்றையும் எளிய முறையில் கணியத்தில் பயன்படுத்தம் வகையில் "KATS INDIC ORULA" எனும் மெல்லியத்தை வடிவமைத்து வௌ¤யிட உள்ளனர்.

கணியத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு என்பது இன்னமும் முழுமை அடையாமலேயே தொடர்ந்து வருகிறது, யுனிக்கோடு முறை உலக மொழிகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தாலும் அதை பயன்படுத்துவதில் உள்ள தொழில்நுட்பச்சிக்கல் காரணமாக பலரும் பயன்படுத்துவதில்லை. உயர்ந்த தொழில்நுட்பம் குறைந்த முயற்சி என்பது மட்டுமே இந்தியர்களின் கணியப்பயன்பாட்டிற்கு அவசியமாகும்.

இதனைக்கருத்தில் கொண்டே சென்னை கணியத்தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனம் பயனாளர் விரும்பியபடி மாற்றிப் பயன்படுத்தும் வகையில் "வரியுருமா" எனும் தமிழ் மொழித்தளத்தை வடிவமைத்து வெற்றியும் கண்டுள்ளது.

தமிழ் மொழியைத் தொடர்ந்து இந்திய மொழிகள் அனைத்தையும் பயன்படுத்தும் வகையில் "KATS INDIC ORULA" எனும் மெல்லியத்தை ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டேவல்டிசாஃப்ட்(Tavultesoft) நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இம்மெல்லியம் கணியப்பயன்பாட்டில் இந்திய மொழிகளுக்கான ஒரு புரட்சிகரமான
மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் 350க்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளீடு செய்யும் கீ -மேன் மெல்லியத்தை தயாரித்து சாதனைப் படைத்து வரும்
டேவல்ட்சாஃப்ட்(Tavultesoft) நிறுவனம் கணியத்தமிழ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது.

விரும்பிய விசைப்பலகை, விரும்பிய எழுத்துரு, விரும்பிய பயன்பாடு என பயனாளரின் முழுசுதந்திரத்திற்கு வழிகோலும் கணியத்தமிழ் நிறுவனம் விரும்பிய மொழி எனும் புதிய பரிமாணத்தையும் இணைத்துக்கொண்டு சாதனைப்படைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
© 2005 Kaniyatamil Software