அச்சுத்துறையில் தட்டச்சு எந்திரம் (Type Writer) கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தபோது உலகமே அதிசயித்த ஒரு கருவியாக இருந்தது. துவக்கத்தில் ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய விசைப்பலகையுடன் (Key Board) இருந்த தட்டச்சு எந்திரங்களில் வேற்று மொழிகள் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது. ஆங்கிலத்தில் உள்ள குறைந்த எழுத்துக்கள் அதற்கு காரணமாகவும் காட்டப்பட்டதுண்டு.
ஆனால், காலம் மாறிற்று. இந்திய மொழிகளில் முதலில் ஹிந்தி எழுத்து பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளும் விசைப்பலகையில் இடம் பெறத் துவங்கின.
தொழில் நுட்பப் புரட்சியின் மகத்தான சாதனையான கம்ப்யூட்டர் எனப்படும் கணினி இயந்திரத்திலும் துவக்கத்தில் இதேபோன்ற சிக்கல் எழுந்தது. ஆனால், இப்போது கம்ப்யூட்டரில் தமிழ் சாஃப்ட்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் டைப் செய்வது இன்று சாதாரணமாகிவிட்டது.
இருப்பினும், தமிழ்மொழிக்கான சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள்களைக் கையாள்வதில் பல்வேறு சிரமங்கள் எழுந்தன. ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழ் வடிவங்களை உருவாக்குவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைய தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றன.
தற்போது தமிழ் சாஃப்ட்வேர் வரலாற்றில் ஒரு புதுமையாக "வரியுருமா" என்கிற புதிய கண்டுபிடிப்பு திகழ்கிறது. இதனை உருவாக்கியிருப்பவர்கள் கணியத்தமிழ் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர்.
அப்படி என்ன "வரியுருமா" புதுமையான சாஃப்ட்வேர்?
இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை முதலான முயற்சிகளால் தீர்க்கப்படாத எழுத்து வடிவங்கள் (Fonts), தட்டச்சு அமைச்சு (Key Board Layout) போன்ற சிக்கல்களை "தரப்படுத்தலே தேவையில்லை" என்று முழுமையாகத் தீர்த்து வைக்கிறது இந்த புதிய கண்டுபிடிப்பு.
தமிழ் டைப்ரேட்டிங் கீ போர்ட் அமைப்பில் தமிழை டைப் செய்வது என்ற பிரச்சினை இதில் இல்லை. நீங்கள் விரும்பிய அமைப்பை நீங்களே வரையறுத்து தட்டச்சு செய்ய வரியுருமா உதவுகிறது.
ஒவ்வொரு எழுத்து வடிவத்துக்கும் (Fonts) வெவ்வேறு விதமான கீ போர்ட் ஆர்டர் என Font-கள் எத்தனை விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. வரியுருமா மூலம் நீங்கள் தேர்ந்தெடுத்த அல்லது வரையறுத்த கீ போர்ட் ஆர்டரிலேயே எல்லா Fonts-களிலும் டைப் செய்யலாம்.
ஒரு Font-இல் டைப் செய்ததை இன்னொரு Font-இல் அச்சிட முடியாது என்ற கவலையும் தேவையில்லை. எந்த Font - இல் டைப் செய்யப்பட்டிருந்தாலும் அதை நாம் விரும்பும் Font - இல் மாற்றித் தருகிறது "வரியுருமா". விருப்பம் போல இ-மெயில் அனுப்புவதற்காக யுனிக்கோட் வடிவத்தில் டைப் செய்வதற்கென பிரத்தியேகமான Font- களை தேடி இனி அலைய வேண்டியதில்லை. இதில் நீங்கள் விரும்பும் எந்த Font-ஐயும் பயன்படுத்தி யுனிகோட் வடிவத்தில் டைப் செய்ய முடியும்.
நமக்கு வருகிற இ-மெயில் செய்திகள் படிக்க முடியாத வடிவத்தில் வந்து நம் தலையைப் பிய்த்துக் கொள்ளச் செய்வதுண்டு. இனி அது குறித்தும் கவலை தேவையில்லை. இது போன்ற மின்னஞ்சல்கள் எந்த Font - இல் டைப் செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து எளிதில் படித்தறியுமாறு மாற்றித் தருகிறது இப்புதிய சாஃப்ட்வேர்.
கம்ப்யூட்டர் குறித்த போதிய அறிவில்லாதவர்கள் கூட Windows பற்றிய போதிய அறிமுகம் இல்லாதவரும் கூட கம்ப்யூட்டரில் நேரடியாக வரியுருமாவைத் திறந்து டைப் செய்வது போன்ற பணிகளைச் செய்யலாம்.
இதுவரை வெளியான Font - மட்டுமல்ல. இனி வரப்போகும் Font - களையும் வரியுருமாவில் நாமே இணைத்துக் கொள்ளுமாறு அமைந்து தன் பயன்பாட்டு எல்லையை விரித்துக் கொண்டே செல்கிறது வரியுருமா.
வரியுருமா இருந்தால் எந்த ஒரு Font மூலமும் ஒருமுறை டைப் செயத தகவலை மீண்டும் டைப் செய்யாமலேயே நாம் விரும்பும் Font - இல் மாற்றி வடிவமைக்கலாம். அச்சிடவும் செய்யலாம் என்பது பத்திரிகைத் துறையின் பணியை வெகுவாகக் குறைக்கும் பயன்மிக்க சாஃப்ட்வேராக இது விளங்குகிறது.
வரியுருமா இருந்தால் ஆங்கில வழி டைப்ரேட்டிங் செய்து பழகியவர்கள் கூட அதையே பயன்படுத்தி தமிழையும் டைப் செய்யலாம். தமிழுக்கென டைப் செய்யத் தெரிந்த நபரைத் தேடி அலைய வேண்டாம்.
கணிப்பொறித் துறைக்கும் இது பயன்பாடுள்ளதாக விளங்குகிறது. தமிழில் வெப்சைட்களை வடிவமைப்போர் யுனிக்கோட் வடிவில் பலவகையான வெப்சைட்களை வடிவமைக்குமாறு HTML வகை சேமிப்பு வசதியுடன் வரியுருமா அமைந்துள்ளது.
வரியுருமாவில் சிறப்பு இணைப்பாக தமிழ் Font-கள் மற்றும் யுனிகோட் வடிவங்கள் பலவற்றுடன் டாக்டர்.வா.செ.குழந்தைசாமி அவர்கள் சீரமைத்து வடிவமைத்துள்ள புதிய தமிழ் வடிவ Font-களும் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
நீண்ட வருட ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக இந்தப் புதுமையான - முதன்மையான தமிழ் சாஃப்ட்வேர் மென்பொருளை கணித்தமிழ் நிறுவனம் உருவாக்கி வெளியிட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி மென்பொருள்களை பயனபடுத்துவதிலிருந்த நடைமுறைச் சிக்கல்களை தவிர்ப்போம். கணினித் துறையிலும் தாய்மொழியைப் போற்றுவோம். |