பதிப்புத் தொழில் உலகம்


தலைப்பைப் பார்த்து அஞ்ச வேண்டா. இயல்பான, வளர்ச்சிக்குரிய சொற்கள் இவை.

தமிழ்ப் பதிப்புத் துறையின் எதிர்காலத்தை வழிநடத்துவோருக்கான சொற்கள் இவை.

பதிப்புத் துறைக்கு ஊன்றுகோலாக இருப்போர் பக்கமாக்குவோர். பக்கமாக்குவோருக்கு அச்சாணி அச்சுமுகமும் எழுத்துருவும்.

தமிழில் எழுந்தமான வழித்தடங்கள். எழுந்தமான அச்சுமுக அறிமுகங்கள். ஒன்றுள் போனால் மற்றதுள் புக முடியாது. ஒன்றில் கோர்த்தால் மற்றதில் கோர்க்க முடியாது. ஒன்றுக்கு ஒரு வகை விரல்தட்டு, மற்றொன்றுக்கு மற்றொரு விரல்தட்டு.

1999 கணினி மாநாட்டு முடிவுகள் விரல்தட்டைச் சீரமைக்க முயன்றன. ஆனாலும் தமிழுக்கு பல்வேறு விரல்தட்டுகள் வந்து கொண்டிருந்தன.

அச்சு முகங்களைச் சீரமைக்க உலகம் உதவியது. உலக மொழிகளுக்கெல்லாம் ஓருருவாக்கிய முறைமை வந்தது. தமிழும் சேர்ந்து கொண்டது.

யாரும் எங்கிருந்தும் எப்பொழுதும் எந்த விரல்தட்டிலும் தட்டச்சு செய்யலாம், எவரும் எங்கிருந்தும் எப்பொழுதும் படிக்கலாம், தமக்கிசைந்த அச்சுமுகத்துக்கு மாற்றலாம்.


 


© 2006 Kaniyatamil Software