ஆய்வு


செயல் திட்டங்கள்

கணியத்தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனம் தனது பங்களிப்பினைக் கீழ்வருமாறு வகைப்படுத்தி முன்னெடுத்து வருகிறது.

1. கணியத்தில் தமிழ் - Tamil in Computer
2. இணையத்தில் தமிழ் - Tamil in Internet
3. தமிழ் மொழி வளர்ச்சியில் கணியம் - Computer in Tamil Language development
4. பன்மொழிப் பயன்பாட்டில் கணியம் - Computer in Multi Language Usage
5. தமிழ்ச்சமூக வளர்ச்சியில் கணியம் - Computer in the Development of Tamil society
6. கணியமொழியாகத் தமிழ் - Natural Language Processing (NLP)
7. செயற்கை விவேகம் - Artificial Intelligence
8. ஆறாம் இலக்கண மரபு - Computational Tamil Grammar

1. கணியத்தில் தமிழ்

கணியத்தில் தமிழின் பயன்பாட்டை மேம்படுத்துமாறு கீழ்வரும் பணிகளுக்கான மெல்லியங்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

1. பலவகையான எழுத்துருக்களையும் உறவுபடுத்தும் மெல்லியம் ( Software to relate different fonts )

2. பல தரப்பட்ட விசைப்பலகை வடிவங்களின் பயன்பாட்டை ஒருங்கிணைக்கும் மெல்லியம் ( Software to relate the applications of different keyboard layouts such as TAM, TAB, TSCII etc...)

3. பேசுவதை நேரடியாகத் தட்டச்சு செய்யும் பேச்சுருவாக்கி மெல்லியம் ( Software to convert speech into text directly )

4. அச்சுபிரதியைப் படித்து ஒலியாக்கம் செய்யும் மெல்லியம் (Software to read printed text )

5. அச்சுபிரதியை நகலாக்கி தட்டச்சு செய்யும் மெல்லியம் ( Optical Character Recognizer - OCR )

2. இணையத்தில் தமிழ்

இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு கீழ்வரும் மெல்லியங்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

1. தமிழில் தடையின்றி மின்னஞ்சல் தொடர்புகொள்வதற்கான மெல்லியம்.

2. இணையத்தளங்களை தமிழிலே வடிவமைப்பதற்கு வேண்டிய மெல்லியங்கள்.

3. இணைய வழி தமிழில் உரைத்தொடர்பு ( Chatting) கொள்வதற்கு வேண்டிய மெல்லியம்.

4. இணைய வழி தமிழ்மொழிப் பயன்பாட்டாளரை ஒருங்கிணைக்கும் அஞ்சல் தளம்.

3. தமிழ் மொழி வளர்ச்சியில் கணியம்

தமிழ் மொழிப் பயன்பாட்டைப் பிற மொழியாளர் மத்தியில் பரப்பவும் , பழந்தமிழ் நூல்களைப் பலரும் எளிதில் படித்தறியவும் , அறிவியல் முதலான பிற துறை அறிவை தமிழில் வழங்கவும் வகை செய்யும் கீழ் வருவன போன்ற மெல்லியங்களை நமது நிறுவனம் தயாரித்து வருகிறது.

1. தமிழ் நூல்களை எண்மின் பதிப்புகளாக ( Digital Publications) வடிவமைப்பதற்கு வேண்டிய மெல்லியங்கள் .

2. பாடநூல்களை எண்மின் பதிப்புகளாக மாற்றியமைக்க வேண்டிய மெல்லியங்கள்.

3. தமிழ் இலக்கணங்களை எளிதில் கற்றுக்கொள்ளவும் , கற்றுக்கொடுக்கவும் வழிகாட்டும் மெல்லியங்கள்.

4. தமிழில் அகராதி , கலைக்களஞ்சியம் போன்றவற்றைத் தயாரிப்பதற்கு வேண்டிய மெல்லியங்கள்

5. சொல் மற்றும் இலக்கண தவறுகளைத் திருத்தியமைக்க உதவும் மெல்லியங்கள் ( Spell check & Grammar check)

4. பன்மொழிப் பயன்பாட்டில் கணியம்

மொழிகளுக்கிடையே உள்ள காழ்ப்புணர்வை விலக்கி தமிழ் மக்கள் பன்மொழிப் புலமை அடையவும் , பிறமொழியிலுள்ள அறிவினைப் பெற்றுக்கொள்ளவும் , வழிகாட்டும் கீழ்வரும் மெல்லியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

1. ஒலிபெயர்ப்பு மெல்லியம் ( Software for Transliteration )

2. எல்லா மொழிகளையும் ஆங்கில அகரவரிசையில் ( Roman Script ) தட்டச்சு செய்யும் பொது மொழியாக்கி மெல்லியம்

3. மொழி பெயர்ப்பு மெல்லியம் ( Software for translation)

4. தமிழ் மூலம் ஆங்கிலம் , ஆங்கில்ம் மூலம் தமிழ் எனப் பல மொழிக் கல்விக்கு வழிகாட்டும் மெல்லியங்கள்

5. தமிழ்ச் சமூக வளர்ச்சியில் கணியம்

கணியத்தை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு பயன்களைப் பெற்று தமிழ்ச்சமூகம் மேன்மையுற வழிகாட்டுமாறு விழிப்புணர்வுய் பிர ச் சாரத்தைக் கணியத்தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

1. கணியப்பயன்பாட்டை எளிமையாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

2. கணியப் பயன்பாட்டுக்கு வகை செய்யும் சமூக அமைப்புக்களை ஊக்கப்படுத்தல்

3. கணியவழி தொலைதூரக் கல்வியை வளர்த்தல்

4. கணியத்தைப் பொழுதுபோக்குச் சாதனமாக அல்லாமல் பயன்பாட்டுக் கருவியாக மக்கள் உணருமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தல்

5. கணிய உலகில் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்கு வேண்டிய நுண்திறன் மிக்க காவல் மெல்லியங்களை அறிமுகப்படுத்தல்

6. கணிய மொழியாகத் தமிழ்

கணியத்தில் மாறுபட்ட செயற்பாடுகளைச் செய்வதற்கு ஏற்றவாறு வெவ்வேறு நிரலியங்கள் ( Programmes ) தயாரிக்கப்படுகின்றன. இந்த நிரலியங்களைத் தயாரிப்பதற்கு C, C++ போன்ற மெல்லிய மொழிகள் ( Software languages or Programming languages ) பயன்படுத்தப்படுகின்றன.

மெல்லிய மொழிகளுக்குப் பதிலாக மனித மொழியைப் பயன்படுத்தி நிரலியங்களை வடிவமைக்கும் ஆய்வு முயற்சிகள் Natural Language Processing (NLP) அதாவது இயற்கை மொழி நிகழியம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்றன.

இறுக்கமான இலக்கணக் கட்டுக்கோப்புடன் கூடிய மொழி தமிழ் என்பதால் எந்திரத்தில் பயன்படுத்துவதற்குப் பிற மொழிகளை விடத் தமிழ் மொழி பெரிதும் பொருந்துவதாக அமைந்துள்ளது. இதனால் தமிழ் மொழியைத் கணிய மொழியாக்குவதன் மூலம் உலகின் உயர்த் தொழில்நுட்பமொழி என்ற தகுதியை நிருபித்து உலக மொழிகளுக்கெல்லாம் முதல் மொழி தமிழே என்பதை நிரூபிக்கும் இயற்கை மொழி நிக ழி ய ஆய்வு தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

7. செயற்கை விவேகம்

திரு.சி.கபிலன் அவர்கள் 1993 ஆம் வருடம் For Artificial Intelligence A Model of Mind (Based on laws of Physics) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்ட செயற்கை விவேகத்துடன் கூடிய எந்திரத்தை உருவாக்குவது எவ்வாறு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்கை மூளைத்திறன் உடைய எந்திரத்தை (Intelligent machine) உருவாக்கும் திட்டத்தை எமது நிறுவனம் விரைவில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது .

8. ஆறாம் இலக்கண மரபு

இதுவரை தமிழ்மொழியில் எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என ஐந்து இலக்கண மரபுகள் காணப்படுகின்றன. தமிழ்மொழியைக் கணியமொழியாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகையில் இதுவரை கண்டறியப்படாதப் பல இலக்கணகூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை "கணிப்பொறி வழி தமிழ் வினைகளின் பகுப்பாய்வு" என்ற நூலிலும் , " இயல் யாப்பு" என்ற நூலிலும் திரு.சி.கபிலன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். கணியமொழியாகத் தமிழ்மொழியை அறிமுகப்படுத்தும் இந்த ஆறாவது இலக்கண மரபை முழுமையாக வடிவமைத்து உலகறியச் செய்வதன் மூலம் தமிழை ஓர் உயர் தொழில்நுட்ப மொழியாக்கும் இலக்கண ஆய்வினையும் கணியத்தமிழ் சாப்ட்வேர் நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

கணியத்தோடு தமிழ்மொழியைத் திட்டமிட்டு இயைபுறுத்தும் தொழில்நுட்பத்தில் வெற்றிபெறுவதன் மூலம் தமிழர் தம் வாழ்வின் தரம் உலகளவில் உயர்வதற்கு ஒர் அரிய வாய்ப்பு நம் முன்னே காத்திருக்கிறது என்ற திரு.சி.கபிலன் அவர்களின் நம்பிக்கையூ ட்டும் ஆய்வு முடிவுகளை ச் செயலாக்கும் முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ள எமது கணியத்தமிழ் சாஃப்ட்வேர் நிறுவனத்திற்கு தமிழ் கூறு நல்லுலகம் தன்னுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குமென எதிர்பார்க்கிறோம்


© 2006 Kaniyatamil Software