| 1. இதழியல் துறையில்.... |
| |
பத்திரிகை நிறுவனங்கள் தங்களுக்கு வரும் தட்டச்சு செய்த படைப்புகளை இன்னொரு முறை தாங்கள் பயன்படுத்தும் எழுத்துருவில் தட்டச்சு செய்து வடிவமைக்க வேண்டிய நிலை இன்று காணப்படுகிறது.
வரியுருமா இருந்தால் எந்த ஒரு எழுத்துருவிலேனும் ஒரு முறை தட்டச்சு செய்யப்பட்ட தகவலை மீண்டும் தட்டச்சு செய்யாமலே தாங்கள் விரும்பும் எழுத்துருவில் மாற்றி வடிவமைப்பதோடு அச்சிடவும் செய்யலாம்.
இதனால் இதழியல் துறையில் வரியுருமா தட்டச்சுப் பணியை வெகுவாகக் குறைக்கும் பயன்மிக்க ஒரு மெல்லியமாக விளங்குகிறது.
|
| |
| 2. மின்னஞ்சல் தொடர்புத்துறையில்.... |
| |
மின்னஞ்சல் மூலம் தமிழில் தொடர்பு கொள்ளும் நிறுவனங்களும் தனிநபர்களும் தம்மிடம் இல்லாத எழுத்துருவில் அனுப்பப்படும் அஞ்சல்கள் யாவற்றையும் சிரமமின்றிப் படிக்கவும், மாற்றி வடிவமைக்கவும் வரியுருமா வழி செய்கிறது. இணையத்தளங்களில் உள்ள செய்திகளையும் இதுபோல் படித்தறியலாம்.
|
| |
| 3. கணியத்தில் தமிழைத் தட்டச்சு செய்யும் இடங்களில்... |
| |
தாங்கள் விரும்பிய அல்லது தங்களுக்குப் பரிச்சயமான விசைப்பலகை ஒழுங்கில் எல்லா எழுத்துருக்களையும் தட்டச்சு செய்யலாம் என்பதால் தமிழில் தட்டச்சு செய்வதற்கு இதை விட எளிமையாக வழிக்காட்டும் மெல்லியம் எதுவும் இல்லை என உறுதியாகக் கூறலாம்.
ஏதேனும் ஒரு விசைப்பலகை ஒழுங்கில் தட்டச்சு செய்யப் பழகியவர் (அது ஆங்கிலத் தட்டச்சுப் பழக்கமாகக் கூட இருக்கலாம்) அதையே பயன்படுத்தி தமிழையும் தட்டச்சு செய்யலாம். வரியுருமா இருந்தால் தமிழுக்கெனப் பிரத்தியேகமான தட்டச்சாளரைத் தேடி அலையத் தேவையில்லை! |
| |
| 4. அயல் நாட்டுத் தமிழர் மற்றும் தமிழ் கற்கும் பிறமொழியாளர் |
| |
ஆங்கில மொழிக்குரிய ரோமானிய அகர வரிசையைப் பயன்படுத்தி தமிழைத் தட்டச்சு செய்வதற்குச் சில மெல்லியங்கள் தோன்றியுள்ளன. ஆனால் இவற்றில் எல்லாம் அவர்கள் வழங்கிய விசைப்பலகை ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயத் திணிப்பு உண்டு.
ஆனால் வரியுருமா மூலம் ஒருவர் தான் விரும்பியவாறு ஆங்கில அகர வரிசையில் விசைப்பலகையை வடிவமைத்து தமிழைத் தட்டச்சு செய்யலாம். அவ்வாறு தட்டச்சு செய்கையில் அவர் பயன்படுத்தும் விசை ஒழுங்கு (Keyset Order) கணித்திரையில் தோன்றி தட்டச்சுப் பணியை இன்னும் எளிதாக்குகிறது.
வரியுருமா மெல்லியத்தைப் பயன்பாட்டாளர் விரும்பியவாறு தமிழ் அல்லது ஆங்கிலமொழி மூலம் இயக்கலாம் என்ற பயன்பாட்டு மொழித் தேர்வும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழைப் பேச மட்டும் தெரிந்த தமிழரும், தமிழ் கற்க விரும்பும் பிற மொழியாளரும் வரியுருமாவை விரும்பிப் பயன்படுத்துவர். |
| |
| 5. கல்வித்துறையில்.... |
| |
கணியத்தை இயக்கக் கற்றுக் கொள்ளும் தமிழருக்கு ஆங்கிலம் பற்றிய அச்சம் இல்லாமல் நேரடியாகத் தமிழ் மூலம் கணியத்தை இயக்கும் பயிற்சியை அளிப்பதற்கு வரியுருமாவைப் பயன்படுத்தலாம்.
இதனால் தமிழ் மூலம் கணியப் பயிற்சியை அறிமுகப்படுத்தும் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வரியுருமா மிகுந்த பயன் அளிக்கும் மெல்லியங்களில் ஒன்றாக விளங்குகிறது. |
| |
| 6. கணியத்துறையில்.... |
| |
தமிழில் இணையத் தளங்களை வடிவமைப்போர் யுனிக்கோட் வடிவில் பலவகையான சீருருக்களைப் பயன்படுத்தி இணையத் தளங்களை வடிவமைக்குமாறு HTML வகை சேமிப்பு வசதியுடன் வரியுருமா அமைந்துள்ளது.
தமிழில் மெல்லியங்கள் தயாரிப்போர் எழுத்துருச் சிக்கல் இல்லாமல் மெல்லியங்களைப் பயன்படுத்துமாறு வடிவமைப்பதற்கு வரியுருமாவுடன் இயைபுறத் தமது மெல்லியங்களை வடிவமைப்பதே சிறந்த வழி ஆகும். |